தமிழ்நாடு ஆர்.டி.ஐ.தன்னார்வலர்கள் கூட்டமைப்பு சார்பில்

மேல்சிறுவள்ளூர் கூட்ரோட்டில் மே தின விழா கொண்டாட்டம்


கள்ளக்குறிச்சி, 1, மே 2021.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், மேல்சிறுவள்ளூர் கூட்ரோட்டில் தமிழ்நாடு ஆர்.டி.ஐ.தன்னார்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் மேதின விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் கூட்டமைப்பின் தலைவர் கே.ஹீரோபாஷா அவர்கள் தலைமை வகித்தார். கூட்டமைப்பு செயலாளர் க.சரவணன் வரவேற்றார். வழக்கறிஞர் பி.என்.ஆர்.அசோக்குமார், அருளம்பாடி மணி, உலகலப்பாடி சரவணன், மைக்கேல்புரம் முன்னாள் தலைவர் ஜோசப், ஆவண எழுத்தர் சேகர், பொம்மி பாத்திரக்கடை சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேதினவிழா குறித்தும், அதன் வரலாறு குறித்தும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் அச்சிட்டு சங்கராபுரம் பேருந்து நிலையம், மேல்சிறுவள்ளூர் கூட் ரோடு, உலகலப்பாடி, மூங்கில்துறைப்பட்டு கடைவீதிகளில் வினியோகம் செய்யப்பட்டது.

வழக்கறிஞர் ஆர்.இராமசாமி பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.

விழாவின் இறுதியாக கூட்டமைப்பு பொருளாளர் சி.திருமால் நன்றி கூறினார்.

செய்தி சேகரிப்பில்...

கே.ஹீரோபாஷா,

கள்ளக்குறிச்சி மாவட்டம்,




செல் : 76397 21112.

 


Comments

Popular Posts