மெய்மையையும் மறக்கிறேன்.

வேக வேகமாய்
துடைத்தெறிகிறேன்
ஆனால்
உன் நினைவுகள்
மீண்டும் மீண்டும்
மனதிற்குள் கூட்டுகட்டி
குடியேறிவிடுகிறது
இயலாமையால்
தோற்றுத்தான் போகிறேன்
அழகிய கூட்டை
பார்த்துக்கொண்டே
மெய்மறக்கிறேன்
ஆம்,
மெய்மையையும்
மறக்கிறேன்.
    க.சரவணன்

Comments

Popular Posts